சிறு பஞ்ச மூலம்
முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்பழுதின்றி ஆற்றப் பணிந்து - முழுதேத்திநண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியாவெண்பா உரைப்பன் சில. 1
ஒத்த ஒழுக்கம் கொலைபோய் புலால்களவோ(டு)ஒத்த இவையல வோர்நாலிட்(டு) - ஒத்தஉறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்சிறுபஞ்ச மூலஞ் சிறந்து. 2
பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான்செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்உய்யான் பிறர்செவிக்கு உய்த்து. 3
கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்துநற்புடைய நாடமிர்து நாட்டுக்கு - நற்புடையமேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்ஆகவே செய்யின் அமிர்து. 4
கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்இல்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும் - இல்லாதான்ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈந்தளியான் என்றலும்நல்லவர்கள் கேட்பின் நகை. 5
உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டுஇடம்பொழிய வேண்டுமேல் ஈகை - மடம்பொழியவேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனையீண்டின் இயையும் திரு. 6
படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்இடைதனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்கோடா மொழிவனப்புக் கோற்(கு)அதுவே சேவகர்க்குவாடாதா வன்கண் வனப்பு. 7
பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்முற்றினான் ஆகும் முதல்வன்நூல் - பற்றினால்பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்காத்துண்பான் காணான் பிணி. 8
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமைஎண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்கேட்டார்நன்(று) என்றல் கிளர்வேந்தன் தன்நாடுவாட்டான் நஞ்றென்றல் வனப்பு. 9
கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோ வான்நாச்சாம்நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானும்கண்டுழி நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்உண்டுழி நாச்சாம் உணர்ந்து. 10
சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடுவிலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படாமாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்புநாவிற்கு நன்றல் வசை. 11
நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும்ஊணிலான் செய்யும் உதாரதையும் - ஏணிலான்சேவகமும் செந்தமிழ் தேற்றான் சுவிச்செயலும்நாவகமே நாடின் நகை. 12
கோறலும் நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சுவேறலும் நஞ்சுமா(று) அல்லானைத் - தேறினான்நீடாங்கு செய்தலும் நஞ்சாம் இளங்கிளியைநாடாதே தீதுரையும் நஞ்சு. 13
இடரின்னா நட்டார்கண் ஈயாமை இன்னாதொடர்பின்னா நள்ளார்கண் தூயார்ப் - படர்பின்னாகண்டல் அவர்பூங் கதுப்பினாய் இன்னாதேகொண்ட விரதம் குறைவு. 14
கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்தண்டான் வழியொழுகல் தன்கிளையஃது - அண்டாதேவேல்வழி வெம்முனை வீடாது மன்னாடுகோல்வழி வாழ்தல் குணம். 15
பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமைஇழைத்ததீங்(கு) எண்ணி யிருத்தல் - இழைத்தபகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார்நகைகெட வாழ்வதும் நன்று. 16
கதநன்று சான்றாண்மை தீது கழியமதநன்று மாண்பில்லார் முன்னர் - விதநன்றால்கோய்வாயிற் கீழுயிர்க்(கு)ஈ துற்றுக் குரைத்தெழுந்தநாய்வாயுள் நல்ல தசை. 17
நட்டாரை யாக்கிப் பகைபணித்து வைஎயிற்றுப்பட்டார் அகல்அல்கு லார்படிந்து - ஓட்டித்தொடங்கினார் இல்லகத்து அன்பில் துறவாஉடம்பினான் ஆய பயன். 18
பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார்வையாமை வார்குழலார் நச்சினும் - நையாமைஓர்த்துடம்பு பேருமென்று ஊனவாய் உண்ணானேல்பேர்த்துடம்பு கோடல் அரிது. 19
தேவறே கற்றவர் கல்லாதார் தேருங்கால்பூதரே முன்பொருள் செய்யாதார் - ஆதரேதுன்பம் இலேம்பண்டு யாமே வனப்புடையேம்என்பார் இருகால் எருது. 20
கள்ளான்கு தென்றும் கழுமான் கரியாரைநள்ளான் உயிரிங்க நாவாடான் - நள்ளானாய்ஊன்மறுத்துக் கொள்ளானேல் ஊனுடம்(பு) எஞ்ஞான்றும்தான்மறுத்துக் கொள்ளான் தளர்ந்து. 21
பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவாவிதையாமை நாறுவ வித்துள மேதைக்குஉரையாமை செல்லும் உணர்வு. 22
பூத்தாலும் காயா மரமுள நன்றறிவார்மூவாது மூவர்நூல் தேற்றதார் - பாத்திப்புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்குஉரைத்தாலும் செல்லா(து) உணர்வு. 23
வடி(வு)இளமை வாய்த்த வனப்பு வணங்காக்குடிகுலமென்(று) ஐந்தும் குறித்து - முடியாத்துளங்கா நிலைகாணார் தொக்(கு)ஈர் பசுவால்இளங்கால் துறவா தவர். 24
கள்ளுண்டல் காணில் கணவன் பிரிந்துறைதல்வெள்(கு)இல ளாய்ப்பிறர் இல்சேறல் - உள்ளிப்பிறர்கருமம் ஆராய்தல் தீப்பெண் கிளைமைத்துறமதுதீப் பெண்ணின் தொழில். 25
பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள்வெள வன்மின்கருங்குணத்தார் கேண்மை கழிமின் - ஒருங்குணர்ந்துதீச்சொல்லே காமின் வருங்காலன் திண்ணிதேவாய்ச்சொல்லே யன்று வழக்கு. 26
வான்குருவிக் கூ(டு)அரக்கு வால்உலண்டு கோல்தகுதல்தேன்புரிந்து யார்க்கும் செயலாகா - தாம்புரீஇவல்லவர் வாய்ப்பன என்னார் ஒரோஒருவர்க்(கு)ஒல்காதோர் ஒன்று படும். 27
அறன்நாட்டான் நன்னெறிக்கண் நிற்க அடங்காப்புறன்நாட்டான் புன்னெறிப் போகாது - புறன்நட்டான்கண்டெடுத்துக் கள்களவு சூது கருத்தினால்பண்டெடுத்துக் காட்டும் பயின்று. 28
ஆண்ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்(கு)இயைந்தமாணாக்கன் அன்பான் வழிபடுவான் - மாணாக்கன்கற்பனைத்தும் மூன்றுங் கடிந்தான் கடியாதான்நிற்பனைத்தும் நெஞ்சிற்கோர் நோய். 29
நெய்தல் முகிழ்த்துணை யாம்குடுமி நேர்மயிரும்உய்தல் ஒருதிங்கள் நாளாகும் - செய்தல்துணங்குநூல் ஓதுதல் கேட்டல்மா ணாக்கர்வணங்கி வலங்கொண்டு வந்து. 30
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்ஒருவன் அறியா தவனும் ஒருவன்குணன்அடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்கணன்அடங்கக் கற்றானும் இல். 31
உயிர்நோய்செய் யாமை உறுநோய் மறத்தல்செயீர்நோய் பிறன்கண்செய் யாமை - செயிர்நோய்விழைவு வெகுளி இவைவிடுவா னாயின்இழிவன்(று) இனிது தவம். 32
வேட்பவன் பார்ப்பான் விளங்கிழைக்குக் கற்புடைமைகேட்பவன் கேடில் பெரும்புலவன் - பாட்டவன்சிந்தையான் ஆகும் சிறந்தது உலகினுள்தந்தையான் ஆகும் நலம். 33
வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்உய்ப்பானே ஆசான் உயர்கதிக்கு - உய்ப்பான்உடம்பினார் வேலி ஒருப்படுத்(து)ஊன் ஆரத்தொடங்கானேல் சேறல் துணிவு. 34
வைததனால் ஆகும் வசைவணக்கம் நன்றாகச்செய்ததனால் ஆகும் செழுங்குலமுன் - செய்தபொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்தஅருளினால் ஆகும் அறம். 35
இல்இயலார் நல்லறமும் எனைத் துறவறமும்நல்லியலின் நாடி உரைக்குங்கால் - நல்லியல்தானத்தால் போதும் தவத்தால் சுவர்க்கமாம்ஞானத்தால் வீடாக நாட்டு. 36
மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்தபல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்தசொல்லின் வனப்பே வனப்பு. 37
தொழீஇ அடஉண்ணார் தோழரில் துஞ்சார்வழீஇய பிறர்பொருளை வெளவார் - கெழீஇக்கலந்தபின் கீழ்காணார் காணாய் மடவாய்புலந்தபின் போற்றார் புலை. 38
பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்கொல்லாமை நன்று கொழிக்குங்கால் - பல்லார்முன்பேணாமை பேணும் தகைய சிறிதெனினும்மாணாமை மாண்டார் மனம். 39
பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார்உண்டார் அடிசிலே தோழரில் - கொண்டாராயாக்கைக்குத் தக்க அறிவில்லார்க் காப்படுப்பின்காக்கைக்குக் காப்படுத்த சோறு. 40
உடையிட்டார் புல்மேய்வார் ஓடுநீர் புக்கார்படையிட்டார் பற்றேதும் இன்றி - நடையிட்டார்இவ்வகை ஐவரையும் என்றும் அணுகாரேசெவ்வகைச் சேவகர் சென்று. 41
பூவாதான் பூப்புப் புறங்கொடுத் தாள்இலிங்கிஓவாதான் கோலம் ஒருபொழுதும் - காவாதாள்யார்யார் பிறர்மனையாள் உள்ளிட்டில் ஐவரையும்சாரார் பகைபோல் சலித்து. 42
வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்வெகுவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்கும்தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடுசெய்வதே பெண்டிர் சிறப்பு. 43
நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாம்அக்கோள்கூட்டம் யோகம் குணன்உணர்ந்து - தோள்கூட்டல்உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானால்பெற்றால்நாள் கொள்க பெரிது. 44
பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமைநாண்ஒடுக்கம் என்றைந்தும் நண்ணின்றாப் - பூண்ஒடுக்கம்பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினும்தன்வரைத் தாழ்த்தல் அரிது. 45
வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்றதாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும்ஓவா(து) உரைக்கும் உலகு. 46
அழியாமை எத்துவமும் சார்ந்தாரை ஆக்கல்பழியாமை பாத்தல்யார் மாட்டும் - ஒளியாமைகன்றுசா வப்பால் கறவாமை செய்யாமைமன்றுசார் வாசு மனை. 47
நசைகொல்லார் நச்சியார்க்(கு) என்றும் கிளைஞர்மிசைகொல்லார் வேளாண்மை கொல்லார் - இசைகொல்லார்பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார்என்பெறினும் கொல்லார் இயைந்து. 48
நீண்டநீர் காடு களர்நிவந்து விண்தோயும்மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு - மாண்டவர்ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானைவேந்தனா நாட்டல் விதி. 49
பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடுமுற்றாமை கேடு முரண்கேடு - தெற்றத்தொழில்மகன் தன்னோடு மாறாயின் என்றும்உழுமகற்குக் கேடென்(று) உரை. 50
கொல்லாமை நன்று கொலைதீ(து) எழுத்தினைக்கல்லாமை தீது கதந்தீது - நல்லார்மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்பழியாமை பல்லார் பதி. 51
உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா(று)எண்ணாமை நன்றிகழல் தீதெளியார் - எண்ணின்அரியரா வார்பிறரிற் செல்லாரே உண்ணார்பெரியரா வார்பிறர் கைத்து. 52
மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமைஒக்க உடனுறைதல் ஊண்அமைவு - தொக்கஅலவலை அல்லாமை பெண்மகளிர்க்(கு) ஐந்துதலைமகனைத் தாழ்க்கு மருந்து. 53
கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான் தன்மாமன்வண்டார்பூந் தொங்கல் மகன்தந்தை - வண்தாராய் !யாப்பார்பூங் கோதை அணிஇழையை நன்கியையக்காப்பார் கருது மிடத்து. 54
ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம் என்றைந்தும்தாம்பல்வா யோடி நிறைகாத்தல் - ஓம்பார்நெடுங்கழைநீண் மூங்கில் எனஇகழ்ந்தார் ஆட்டும்கொடுங்குழை போலக் கொளின். 55
பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும் நற்கவிஎன்பெறும் வாதி இசைபெறும் - முன்பெறக்கல்லார்கற் றாரினத்தார் அல்லார் பெறுபவேநல்லார் இனத்து நகை. 56
நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்துஒல்லை உயிர்க்(கு)ஊற்றம் கோலாகி - ஒல்லுமெனின்மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தான்ஆயின் அழிதல் அறிவு. 57
தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்இல்நிலையும் ஈடில் இயல்நிலையும் - துன்னிஅளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்பிளந்தறியும் பேராற்ற லான். 58
பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போந்தஅருள்போகா ஆரறம்என்(று) ஐந்தும் - இருள்தீரக்கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்தேறப் படுங்குணத்தி னான். 59
நன்புலத்து வையடக்கி நாளும்மா டோ போற்றிப்புன்கலத்தைச் செய்(து) எருப் போற்றியபின் - இன்புலத்தின்பண்கலப்பை என்றிலை பாற்படுப் பான்உழவோன்நுண்கலப்பை நூலோது வார். 60
ஏலாமை நன்றீதல் தீதுபண்(பு) இல்லார்க்குச்சாலாமை நன்றுநூல் சாயினும் - சாலாமைநன்று தவநனி செய்தல்தீ(து) என்பாரைஇன்றுகா(று) யாம்கண் டிலம். 61
அரம்போல் கிளையடங்காய் பெண்வியக்கத் தொண்டுமரம்போல் மகன்மாறாய் நின்று - கரம்போலக்கள்ளநோய் காணும் அயல்ஐந்தும் ஆகுமேல்உள்ளநோய் வேண்டா உயிர்க்கு. 62
நீர்அறம் நன்று நிழல்நன்று தன்இல்லுள்பார்அறம் நன்றுபாத்(து) உண்பானேல் - பேரறம்நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்ஒன்றுமாம் சால வுடன். 63
பிடிப்பிச்சை பின்னிறை ஐயங்கூழ் கூற்றோ(டு)எடுத்திரந்த உப்(பு)இத் துணையோ(டு) - அடுத்துச்சிறுபயம் என்னார் சிதவலிப்(பு) ஈவார்பெறுபயன்பின் சாலப் பெரிது. 64
வெந்தீங்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்உப்(பு)அந்த மகன்சார்ந்த தந்தையென்(று) - ஐந்தினுள்ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிதெனினும்குன்றுபோற் கூடும் பயன். 65
குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்துஉளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்ஏகும் சுவர்க்கத்(து) இனிது. 66
போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்ஓர்த்(து) பால்மறைத்(து) உண்பான்மேய் - ஓர்த்தஅறமாம்மேல் சொல்பொறுக்க அன்றேல் கலிக்கண்துறவறம்பொய் இல்லறமே வாய். 67
தான்பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்துத்தான்பிற ரால்கருதற் பாடுணர்ந்து - தான்பிறரால்சாவ எனவாழான் சான்றேரால் பல்யாண்டும்வாழ்க எனவாழ்தல் நன்று. 68
நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்வடுத்தீர் பகல்வாய் உறையே - வடுத்தீராஆகும்அந் நான்கொழிந்(து) ஐந்தடக்கு வானாநின்வேகும்பம் வேண்டான் விடும். 69
கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாதுகொன்றதனைக் கொண்டான் கொழுக்குங்கால் - கொன்றதனைஅட்டான் இடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக்கட்டெறிந்த பாவம் கருது. 70
சிறைக்கிடந்தார் செந்தார்க்கு நோற்பார் பலநாள்உறைக்கிடந்தார் ஒன்றிடையிட்(டு) உண்பார் - பிறைக்கிடந்துமுற்றனைத்தும் உண்ணா தவர்க்கீந்தார் மன்னவராய்க்கற்றனைத்தும் வாழ்வார் கலந்து. 71
ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியைஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்றஅழிந்தானை இல்வைத்தல் பேரறமா ஆற்றமொழிந்தார் முதுநூலார் முன்பு. 72
வலியிழந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்நலி(பு)அழிந்தார் நாட்(டு)அறைபோய் நைந்தார் - மெலிவொழியஇன்னவராம் என்னாராய் ஈந்த ஒருதுற்றுமன்னவராய்ச் செய்யும் மதித்து. 73
கலங்காமைக் காத்தல் கருப்பஞ் சிதைந்தால்இலங்காமை பேரறத்தால் ஈற்றம் - விலங்காமைக்கோடல் குழவி மருந்து வெருட்டாமைநாடின் அறம்பெருமை நாட்டு. 74
சூலாமை சூலிற் படுந்துன்பம் ஈன்றபின்ஏலாமை ஏற்றால் வளர்ப்பருமை - சால்பவைவல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமைகொல்லாமை நன்றால் கொழித்து. 75
சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார்துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்கவருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்ஒருநோயும் இன்றிவாழ் வார். 76
பக்கம் படாமை ஒருவர்க்குப் பாடேற்றல்தக்கம் படாமை தவமல்லாத் - தக்கார்இழியினர்க்கே யானும் பசித்தார்க்(கு)ஊண் ஈதல்கழிசினங் காத்தல் கடன். 77
புண்பட்டார் போற்றுவார் இல்லாதவர் போகுயிரார்கண்கெட்டார் காலிரண்டும் இல்லாதார் -கண்கண்பட்(டு)ஆழ்ந்து நெகிழ்ந்தவர்க்கு ஈந்தார் கடைபோகவாழ்ந்து கழிவார் மகிழ்ந்து. 78
பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்அஞ்சா(து) உடைபடையுள் போந்தெறிவான் - எஞ்சாதேஉண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்எண்பதின் மேலும்வாழ் வாண். 79
வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற்(று) ஏறார்புரையில்லார் நள்ளார்போர் வேந்தன் - வரைபோல்கடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்கொடும்புலி கொட்கும் வழி. 80
தக்கார் வழிகெடாது ஆகுந் தகாதவர்உக்க வழியராய் ஒல்குவர் - தக்கஇனத்தினான் ஆகும் பழியும் புகழும்மனத்தினான் ஆகும் மதி. 81
கழிந்தவை தானிரங்கான் கைலாரா நச்சான்இழிந்தவை இன்புறான் இல்லார் - மொழிந்தவைமென்மொழியால் உள்நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால்இன்மொழியால் ஏத்தப் படும். 82
காடுபோல் கட்கினிய இல்லம் பிறர்பொருள்ஓடுபோல் தாரம் பிறந்ததாய் - ஊடுபோய்க்கோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேல் பல்லவர்ஒத்தினால் என்ன குறை. 83
தோல்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்பாற்பட்டார் உண்ணார் பழிபாவம் - பாற்பட்டார்ஏற்றவாது இன்புற்று வாழ்வன வீடழியக்கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து. 84
நகையொரு மந்திரம் நட்டார்க்கு வாரம்பகையொரு பாட்டுரையென்(று) ஐந்தும் - தொகையொடுமூத்தோர் இருந்துழி வேண்டார் முதுநூலுள்யாத்தார் அறிந்தவர் ஆய்ந்து. 85
சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமேவித்தகர் கண்டவீ(டு) உள்ளிட்டாங்(கு) - அத்தகத்துஅந்தஇவ் ஐந்தும் அறிவான் தலையாயசிந்திப்பிற் சிட்டன் சிறந்து. 86
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடுஎண்ணுங்கால் சாந்தே இலைநறுக்கிட்(டு) - எண்ணுதல்இட்டஇவ் ஐந்தும் அறிவான் இடையாயசிட்டனென்(று) எண்ணப் படும். 87
நாணிலன் நாய்நன்கு நள்ளாதான் நாய்பெரியார்ப்பேணிலன் நாய்பிறர் சேவகன்நாய் - ஏணில்பொருந்திய பூண்முலையார் சேரிகைத்(து) இல்லான்பருத்தி பகர்வழி நாய். 88
நாண்எளிது பெண்மை நகையெளிது நட்டானேல்ஏண்எளிது சேவக னேல்பெரியார் - பேண்எளிதுகொம்பு மறைக்கும் இடையாய் அளியன்மீ(து)அம்பு பறத்தல் அரிது. 89
இன்சொலான் ஆகும் கிளமை இயல்பில்லாவன்சொல்லின் ஆகும் பகைமைமன் - மென்சொல்லின்ஓய்வில்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்வீவில்லா விடாய் விடும். 90
தக்க(து) இளையான் தவம்செல்வன் ஊண்மறுத்தல்தக்கது கற்புடை யாள்வனப்புத் - தக்க(து)தழல்தண்என் தோளான் அறிவிலன் ஆயின்நிழற்கண் முயிறாய் விடும். 91
பொய்யால் சுவர்க்கம்வா யால்நிர யம்பொருள்மையார் மடந்தையால் வாழ்வினிது - மெய்யென்றால்மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய் தீதன்றால்எத்தவ மானும் படல். 92
புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தேநல்லறத்தா ரோடு நடக்கலாம் - நல்லறத்தார்க்(கு)அட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே இம்மையில்அட்டிட்டுண் டாற்றவாழ் வார். 93
ஈவது நன்றுதீ(து) ஈயாமை நல்லவர்மேவது நன்றுமே வாதாரோ(டு) - ஓவாதுகேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கேஓட்டுத் தவநிற்கும் ஊர்ந்து. 94
உண்இடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரங்கொண்(டு)எண்இடத்தும் செல்லாமை தான்தலையே - எண்ணிஉரைப்பூசல் கோறல் உயர்தவமேல் கங்கைக்கரைப்பூசை போற்றக் கடை. 95
பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசிபொத்தில் பொருள்திறத்துச் செவ்வியான் - பொத்தின்றுவைத்தார் அதுவழக்குஞ் சான்றவர் தம்செம்மைசெத்தால் அறிக சிறந்து. 96
வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மைகுறிப்படரல் தீக்சொற்க ளோடு - மொழிப்பட்டகாய்ந்து விடுதல் களைந்(து)உயக் கற்றவர்ஆய்ந்து விடுதல் அறம். 97
மல்லிவர் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால் - கல்லாமறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி யாசான்சிறுபஞ்ச மூலம்செய் தான். 98