படர்ந்த புகழ்

கி. வா. ஜகந்நாதன் (1906–1988)

அதிகமான் நெடுமான் அஞ்சி

ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்;பல்நாள் பயின்று பலரொடு செல்லினும்தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ!

அணிபூண் அணிந்த யானை இயல்தேர்அதியமான் பரிசில் பெறூஉம் காலம்நீட்டினும் நீட்டா தாயினும், யானைதன்கோட்டிடை வைத்த கவளம் போலக்கையகத் தது; அது பொய்யா காதே;அருந்தே மாந்த நெஞ்சம்,வருந்த வேண்டா! வாழ்கவன் தாளே.

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனிகுண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்தண்டுறை ஊரன் பெண்டினை ஆயின்பலவா குகதின் நெஞ்சிற் படரே !ஓவாது ஈயும் மாரி வண்கைக்கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சிகொல்முனை இரவூர் போலச்சிலவா குகநீ துஞ்சும் நாளே!