மலையேறும்போது
காட்டு வழிதனிலே
ஏறாத மலையேறி எருது ரண்டும் தத்தளிக்கப்
பாராமல் கைகொடுப்பார் பழநிமலை வேலவனே
எருக்கிலைக்குத் தண்ணீர் கட்டிஎத்தனைப் பூப் பூத்தாலும்மருக் கொழுந்து வாசமுண்டோ
மலைப் பழநி வேலவனே
உச்சியிலே சடையிருக்கஉள்ளங் கையில் வேலிருக்கநெற்றியிலே நீறிருக்கக் கந்தையா என்
நினைவு தப்பிப் போவதென்னோ.