அருளுடைமை

Tiruvalluvar

திருக்குறள் மணக்குடவருரை

நல்லாற்றான் நாடி அருளாள்க; பல்லாற்றான்தேரினும் அஃதே துணை.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்பதன்னுயிர் அஞ்சும் வினை.

அல்லல் அருளாள்வார்க் கில்லை; வளிவழங்கும்மல்லல்மா ஞாலம் கரி.

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.

பொருணீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருணீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால்; அருளற்றார்அற்றார்; மற்றாதல் அரிது.

வலியார்முன் தம்மை நினைக்க,தாம் தம்மின்மெலியார்மேல் செல்லும் இடத்து.