அவாவறுத்தல்
திருக்குறள் மணக்குடவருரை
அஞ்சுவ தோரும் அறனே; ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா.
அவாவில்லார்க் கில்லாகும் துன்பம்; அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.
அவாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து.
அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார்அற்றாக அற்ற திலர்.
தூஉய்மை என்ப தவாவின்மை; மற்றதுவாஅய்மை வேண்ட வரும்.
அவாவினை ஆற்ற அறுப்பின், தவாவினைதான்வேண்டும் ஆற்றான் வரும்.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை;யாண்டும் அதுவொப்ப தில்.
இன்பம் இடையறா தீண்டும்; அவாவென்னும்துன்பத்துள் துன்பம் கெடின்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.
ஆரா இயற்கை அவாநீப்பின்; அந்நிலையேபேரா இயற்கை தரும்.