கள்ளாமை

Tiruvalluvar

திருக்குறள் மணக்குடவருரை

எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருள்;கள்ளத்தால் கள்வோம் எனல்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்தள்ளாது புத்தேள் உலகு.

களவினால் ஆகிய ஆக்கம், அளவிறந்தாவது போலக் கெடும்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.

அளவல்ல செய்தாங் கெடுவர் களவல்லமற்றைய தேற்றா தவர்.

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண் இல்.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்களவறிந்தார் நெஞ்சில் கரவு,