நடுவுநிலைமை
திருக்குறள் மணக்குடவருரை
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.
சொற்கோட்ட மில்லது செப்பம், ஒருதலையாஉட்கோட்ட மின்மை பெறின்.
தகுதிஎன ஒன்று நன்றே, பகுதியால்பால்பட் டொழுகப் பெறின்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பேணிப்பிறவும் தமபோல் செயின்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி.
கெடுவாக வையா துலகம், நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே ஒழிய விடல்.
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.
தக்கார் தகவிலார் என்ப தவரவர்எச்சத்தால் காணப் படும்.
செப்பம் உடையவன் ஆக்கம், சிதைவின்றிஎச்சத்திற் கேமாப் புடைத்து.