வெஃகாமை

Tiruvalluvar

திருக்குறள் மணக்குடவருரை

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம், விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.

அஃகி அகன்ற அறிவென்னாம், யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்?

இலமென்று வெஃகுதல் செய்யார், புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான், பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.

நடுவின்றி நன்பொருள் வெஃகின், குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.

இறலீனும் எண்ணாது வெஃகின்; விறலீனும்வேண்டாமை என்னும் செருக்கு.

அஃகாமை செல்வத்திற் கியாதெனின், வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறனறிந் தாங்கே திரு.