வெகுளாமை

Tiruvalluvar

திருக்குறள் மணக்குடவருரை

மறத்தல் வெகுளியை யார்மாட்டும், தீயபிறத்தல் அதனான் வரும்.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்; அல்லிடத்துக்காக்கிலென் காவாக்கால் என்?

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.

செல்லா இடத்தும் சினம் தீது; செல்லிடத்தும்இல்லதனின் தீய பிற.

தன்னைத்தான் காக்கச் சினங்காக்க; காவாக்கால்தன்னையே கொல்லும் சினம்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு,நிலத்தெறிந்தான் கைபிழையா தற்று.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உ.ளவோ பிற.

உள்ளிய வெல்லாம் உடனெய்தும், உள்ளத்தான்உள்ளான் வெகுளி எனின்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்;துறந்தார் துறந்தார் துணை.