அவர் வயின் விதும்பல்

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல். ⁠1261

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்து. ⁠1262

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன். ⁠1263

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு. ⁠1264

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்கும்என் மென்தோள் பசப்பு. ⁠1265

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட. ⁠1266

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்அன்ன கேளிர் விரன். ⁠1267

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து. ⁠1268

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. ⁠1269

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்உள்ளம் உடைந்துக்கக் கால். ⁠1270