இடுக்கண் அழியாமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில். ⁠621

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும். ⁠622

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். ⁠623

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. ⁠624

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும். ⁠625

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர். ⁠626

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல். ⁠627

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன். ⁠628

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன். ⁠629

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு. ⁠630