கண் விதுப்பு அழிதல்

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது. ⁠1171

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்பது எவன். ⁠1172

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து. ⁠1173

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து. ⁠1174

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்காமநோய் செய்தஎன் கண். ⁠1175

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது. ⁠1176

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துவேண்டி அவர்க்கண்ட கண். ⁠1177

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணாது அமைவில கண். ⁠1178

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண். ⁠1179

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து. ⁠1180