தெரிந்து செயல் வகை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். ⁠461

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல் ⁠462

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார். ⁠463

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர். ⁠464

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு. ⁠465

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும். ⁠466

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. ⁠467

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும். ⁠468

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை. ⁠469

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுகொள்ளாத கொள்ளாது உலகு. ⁠470