நாடு

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு. ⁠731

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு. ⁠732

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு. ⁠733

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு. ⁠734

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு. ⁠735

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை. ⁠736

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. ⁠737

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து. ⁠738

நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு. ⁠739

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு. ⁠740