நீத்தார் பெருமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. ⁠21

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. ⁠22

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு. ⁠23

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. ⁠24

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி. ⁠25

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார். ⁠26

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. ⁠27

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். ⁠28

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது. ⁠29

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான். ⁠30