படைச் செருக்கு
திருக்குறள், மூலம்
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர். 771
கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு. 773
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும். 774
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 775
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து. 776
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். 778
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர். 779
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து. 780