பயன் இல சொல்லாமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். ⁠191

பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலிற் றீது. ⁠192

நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை. ⁠193

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து. ⁠194

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின். ⁠195

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி யெனல். ⁠196

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று. ⁠197

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல். ⁠198

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர். ⁠199

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல். ⁠200