புணர்ச்சி மகிழ்தல்
திருக்குறள், மூலம்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள. 1101
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து. 1102
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு. 1103
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள். 1104
வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட் டார் கதுப்பினாள் தோள். 1105
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள். 1106
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு. 1107
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு. 1108
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன். 1109
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு. 1110