தேவரும் குருவும்

கி. வா. ஜகந்நாதன் (1906–1988)

புது மெருகு

"செம்பொன் வரைமேற் பசும்பொன் எழுத்துஇட்ட தேபோல்அம்பொன் பிதிர்வின் மறுஆயிரத்தெட்டு அணிந்துவெம்புஞ் சுடரிற் சுடருந்திருமூர்த்தி விண்ணோர்அம்பொன் முடிமேல் அடித்தாமரைசென்னி வைப்பாம்."

"மூவா முதலா உலகம்மொருமூன்றும் ஏத்தத்தாவாத இன்பந் தலையாயதுதன்னின் எய்திஓவாது நின்ற குணத்தொண்ணிதிச்செல்வன் என்பதேவாதி தேவன் அவன்சேவடிசேர்தும் அன்றே."