பாரதி வாக்கு
காட்டு வழிதனிலே
“பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும்—கவனி!பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.பயம் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்—கவனி!பொய் தீர்ந்தால் பயம் தீரும்.
பயம் தீர்ந்தால் பொய் தீரும்”
"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரேயந்திரங்கள் வகுத்திடுவீரே"
வருக காந்தி, ஆசியா வாழ்வே,தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்,ஆன்மா அதனால் ஜீவனை யாண்டுமேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்,பாரதநாட்டின் பழம்பெருங் கடவுளர்வீரவான் கொடியை விரித்து நீ நிறுத்தினாய்மானுடர் தம்மை வருத்திடும் தடைகள்ஆனவையுருகி அழிந்திடும் வண்ணம்உளத்தினில் நீகனல் உறுத்துவாய் எங்கள்காந்தி மஹாத்மா, நின்பாற் கண்டனம்மாந்தருட் காணநாம் விரும்பிய மனிதனைநின்வாய்ச் சொல்லில் நீதிசேர் அன்னைதன்வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம்தொழுந்தா யழைப்பிற் கிணங்கி வந்தோம் யாம்எழுந்தோம், காந்திக் கீந்தோம் எமதுயிர்.