மழை

பாரதியார் (1882–1921)

பாரதியார் கதைகள்

“காற்றடிக்குது கடல் குமுறுதுகண்ணை விழிப்பாய் நாயகனேதூற்றல் கதவு, சாளரமெல்லாம்தொளைத் தடிக்குது கூடத்திலே—மழைதொளைத் தடிக்குது கூடத்திலே.“

திக்குக்கள் எட்டும் சிதறி—தகதீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம்பக்க மலைகள் உடைந்து—வெள்ளம்பாயுது, பாயுது, பாயுது, தாம் தரிகிடதக்கத் ததிங்கிட தித்தோம்—அண்டம்சாயுது, சாயுது, சாயுது, பேய் கொண்டுதக்கை யடிக்குது காற்று—தக்கத்தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிடவெட்டி யடிக்குது, மின்னல்—கடல்

வீரத் திரை கொண்டு விண்ணை யடிக்குதுகொட்டி யிடிக்குது மேகம்—கூகூ வென்று விண்ணைக் குடையுது காற்றுசட்டச் சட, சட்டச் சட, டட்டா—என்றுதாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்எட்டுத் திசையும் இடிய—மழைஎங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!—தக்கத் தக, தக்கத் தக, தித்தோம்!

அண்டங் குலுங்குது தம்பி—தலைஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்மிண்டிக்குதித் திடுகின்றான்—திசைவெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்செண்டு புடைத்திடு கின்றார்—என்னதெய்விகக் காட்சியைக் கண் முன்பு கண்டோம்கண்டோம், கண்டோம், கண்டோம்—இந்தக்காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்?தக்கத்தகத் தக்கத்தக தித்தோம்.