அன்புடைமை
திருக்குறள் மணக்குடவருரை
என்பி லதனை வெயில்போலக் காயுமே,அன்பி லதனை அறம்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பார்க்கண்வற்றல் மரம்தளிர்த் தற்று.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும், யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்கு?
அன்பின் வழிய துயிர்நிலை : அஃதிலார்க்கென்புதோல் போர்த்த உடம்பு.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.
அன்போ டியைந்த வழக்கென்ப, ஆருயிர்க்கென்போ டியைந்த தொடர்பு.
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்தின்புற்றார் எய்தல் சிறப்பு.
அன்பீனும் ஆர்வ முடைமை; அதுவீனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்;மறத்திற்கும் அஃதே துணை.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.