இனியவைகூறல்
திருக்குறள் மணக்குடவருரை
அகனமர்ந் தீதலின் நன்றே, முகனமர்ந்தின்சொல னாகப் பெறின்.
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி, அகத்தானாம்இன்சொ லினதே அறம்.
அல்லவை தேய அறம்பெருகும், நல்லவைநாடி இனிய சொலின்.
பணிவுடையன் இன்சொல்ல னாதல், ஒருவற்கணி;அல்ல மற்றுப் பிற.
சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று,பண்பின் தலைப்பிரியாச் சொல்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
இன்சொல் இனிதீன்றல் காண்பான், எவன்கொலோவன்சொல் வழங்கு வது.
இனிய உளவாக இன்னாத கூறல்,கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.