கொல்லாமை
திருக்குறள் மணக்குடவருரை
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிதின்னுயிர் நீக்கும் வினை.
நல்லா றெனப்படுவ தியாதெனின், யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.
ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.
அறவினை யாதெனின் கொல்லாமை. கோறல்பிறவினை யெல்லாம் தரும்.
நிலைஅஞ்சி நீத்தாரு ளெல்லாம், கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்தொகுத்தவற்று ளெல்லாம் தலை.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணும் கூற்று,
உயிருடம்பு நீக்கியார் என்ப, செயிருடம்பூண்செய்யாத வாழ்க்கை யவர்.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவார் அகத்து.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கம் கடை.