நிலையாமை
திருக்குறள் மணக்குடவருரை
நில்லா தவற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை.
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;போக்கும் அதுவிளிந் தற்று.
நாளென்ப தொன்றுபோல் காட்டி உயிரீரும்வாள துணர்வார்ப் பெறின்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகு.
ஒருபொழுதும் வாழ்வ தறியார். கருதுபகோடியும் அல்ல பல.
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே,உடம்போ டுயிருடை நட்பு.
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.
புக்கில் அமைந்தின்று கொல்லோ, உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு.