நீத்தார் பெருமை
திருக்குறள் மணக்குடவருரை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு.
துறந்தார் பெருமை துணைக் கூறின்,வையத்திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்,வரனென்னும் வைப்புக்கோர் வித்து.
சுவைஒளி ஊறோசை நாற்றமென் றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு.
ஐந்தவித்தான் ஆற்றல், அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலும் கரி.
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்பெருமை பிறங்கிற் றுலகு.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.
செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.