புகழுடைமை
திருக்குறள் மணக்குடவருரை
தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.
ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லதூதிய மில்லை உயிர்க்கு.
உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்.
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன் றில்.
நிலவரை நீள்புகழ் ஆற்றின், புலவரைப்போற்றாது புத்தேள் உலகு.
புகழ்பட வாழாதார், தம்நோவார், தம்மைஇகழ்வாரை நோவ தெவன்.
வசையென்ப வையகத்தார்க் கெல்லாம், இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழியவாழ்வாரே வாழா தவர்.
வசையிலா வண்பயன் குன்றும், இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்வித்தகற் கல்லால் அரிது.