அறிவு உடைமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண். ⁠421

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு. ⁠422

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. ⁠423

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு. ⁠424

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்கூம்பலும் இல்ல தறிவு. ⁠425

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு. ⁠426

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர். ⁠427

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில். ⁠428

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய். ⁠429

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர். ⁠430