ஊக்கம் உடைமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று. ⁠591

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும். ⁠592

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார். ⁠593

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை. ⁠594

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு. ⁠595

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து. ⁠596

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு. ⁠597

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு. ⁠598

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின். ⁠599

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்மரம்மக்க ளாதலே வேறு. ⁠600