கூடா ஒழுக்கம்

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். ⁠271

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின். ⁠272

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. ⁠273

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. ⁠274

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுஏதம் பலவுந் தரும். ⁠275

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். ⁠276

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியார் உடைத்து. ⁠277

மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். ⁠278

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னவினைபடு பாலால் கொளல். ⁠279

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். ⁠280