கொடுங்கோன்மை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து. ⁠551

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு. ⁠552

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும். ⁠553

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு. ⁠554

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை ⁠555

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி. ⁠556

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு. ⁠557

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின். ⁠558

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். ⁠559

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின். ⁠560