நன்றி இல் செல்வம்

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல். ⁠1001

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்மருளானாம் மாணாப் பிறப்பு ⁠1002

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை. ⁠1003

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். ⁠1004

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடியுண் டாயினும் இல். ⁠1005

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றுஈதல் இயல்பிலா தான். ⁠1006

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று. ⁠1007

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று. ⁠1008

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர். ⁠1009

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனையது உடைத்து. ⁠1010