புறம் கூறாமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது. ⁠181

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை. ⁠182

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும். ⁠183

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்கமுன்னின்று பின்நோக்காச் சொல். ⁠184

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும். ⁠185

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும். ⁠186

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர். ⁠187

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு. ⁠188

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை. ⁠189

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. ⁠190