பெரியோரைத் துணைக்கோடல்

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். ⁠441

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். ⁠442

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். ⁠443

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை. ⁠444

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். ⁠445

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில். ⁠446

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேகெடுக்குந் தகைமை யவர். ⁠447

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும். ⁠448

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை. ⁠449

பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல். ⁠450