பொறை உடைமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. ⁠151

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று. ⁠152

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை. ⁠153

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும். ⁠154

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. ⁠155

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ். ⁠156

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று. ⁠157

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல். ⁠158

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர். ⁠159

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின். ⁠160