மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
திருக்குறள், மூலம்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691
மன்னர் விழைப விழையாமை மன்னரால்மன்னிய ஆக்கந் தரும். 692
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது. 693
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து. 694
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை. 695
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல். 696
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல். 697
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோடு ஒழுகப் படும். 698
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர். 699
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும். 700