வினை செயல் வகை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது. ⁠671

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை. ⁠672

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல். ⁠673

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும். ⁠674

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல். ⁠675

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். ⁠676

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல். ⁠677

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று. ⁠678

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல். ⁠679

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து. ⁠680