வெருவந்த செய்யாமை

Tiruvalluvar

திருக்குறள், மூலம்

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. ⁠561

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர். ⁠562

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும். ⁠563

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும். ⁠564

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து. ⁠565

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும். ⁠566

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம். ⁠567

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகும் திரு. ⁠568

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும். ⁠569

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை. ⁠570