காணி நிலம் வேண்டும்
1909
காணி நிலம் வேண்டும்-பராசக்திகாணி நிலம் வேண்டும்;-அங்கு,தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்துய்ய நிறத்தினதாய்-அந்தக்காணி நிலத்திடையே-ஓர் மாளிகைகட்டித் தரவேணும்;-அங்கு,கேணி யருகினிலே-தென்னைமரம்கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்பக்கத்திலே வேணும்;-நல்லமுத்துச் சுடர்போலே-நிலாவொளிமுன்புவர வேணும்?அங்குகத்துங் குயிலோசை-சற்றே வந்துகாதிற்பட வேணும்;-என்றன்சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்தென்றல்வர வேணும்.
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொருபத்தினிப் பெண்வேணும்;-எங்கள்கூட்டுக் களியினிலே-கவிதைகள்கொண்டுதர வேணும்;-அந்தக்காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்காவலுற வேணும்;என்தன்பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்பாலித்திட வேணும்.